என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பூர் மாவட்டம்"
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- எஸ்.பி.யின் உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கியுடன் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கியுடன் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடும் பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது. எஸ்.பி.யின் இந்த உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மருத்துவ கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், உரிமம் ரத்து செய்யப்படும்.
திருப்பூர்:
மருத்துவமனைகள், கிளினிக்குகள் தங்கள் உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிமம் புதுப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று காலத்தில் புதிதாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் உருவாகின.மருத்துவ கல்வி இயக்ககம் 'ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பு, தேவையான 'வென்டிலேட்டர்' வசதி ஏற்படுத்த வேண்டும். அவசர கால பயன்பாட்டுக்கு சாய்வுதளம் அல்லது லிப்ட்வசதி இருத்தல் வேண்டும். இத்தகைய வசதியுள்ள மருத்துவமனைக்கு மட்டும்பதிவு உரிமம் வழங்கப்படும்.
பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என அறிவித்தது.உரிமம் புதுப்பிக்க திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,310 விண்ணப்பங்கள் மருத்துவத்துறைக்கு வந்துள்ளது. இவற்றில் 1,192 மருத்துவமனை, கிளினிக் உரிமம் புதுப்பித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தி, 118 மருத்துவமனை, கிளினிக் ஆகியவற்றின் நிலையை ஆராய வேண்டியுள்ளது. இவற்றில் மருத்துவ கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து மருத்துவமனை செயல்பட அனுமதி மறுக்கப்பட உள்ளதாக மருத்துவ சுகாதார பணிகள் துறையினர் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் துணை கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- கோவை, கொச்சின், சேலம் பைப்லைன் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக செந்தில் அரசன் தாராபுரம் ஆர்.டி.ஓ. வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் :
தமிழகத்தில் துணை கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியாக இருந்த ரவிச்சந்திரன் சேலம் தனித்துணை கலெக்டராக (முத்திரைத்தாள்) நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கலால் மேற்பார்வையாளராக இருந்த கணேஷ் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காமராஜ் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் ஆர்.டி.ஓ.வாக இருந்த ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலால் உதவி ஆணையாளராக இருந்த செல்வி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கொச்சின் சேலம் பைப்லைன் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த செந்தில் அரசன் தாராபுரம் ஆர்.டி.ஓ. வாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக இருந்த அம்பாயிரநாதன் சேலம்ஆர்.டி.ஓ.வாக மாற்றப்பட்டுள்ளார்.
- மாவட்ட கலெக்டர்களை பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
- திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் :
தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களை பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளரான கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்னும் சில நாட்களில் திருப்பூர் கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார்.
- தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.
- திருப்பூர் மாநகரப் பகுதியில் 110 மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் 140 என மொத்தம் 250 மதுக்கடைகள் உள்ளன.
திருப்பூர் :
சட்டசபை கூட்டத் தொடரில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்தது.இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுத்தும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.
அவ்வகையில் இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகரப் பகுதியில் 110 மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் 140 என மொத்தம் 250 மதுக்கடைகள் உள்ளன.இவற்றில் விற்பனை குறைவான கடைகள், அருகருகே உள்ள கடைகள், கோவில், பள்ளி, பஸ் நிறுத்தம் போன்றவற்றுக்கு அருகே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள்,பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு உள்ள கடைகள் ஆகியன கண்டறியப்பட்டு அந்த கடைகள் மூடப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுப்ரமணியம் கூறியதாவது:- அமைச்சர் அறிவித்தபடி செயல்படும் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். முழுமையான வழிகாட்டு அறிவுரைகள் குறித்த எழுத்துப்பூர்வமான உத்தரவு இன்னும் வரவில்லை. அந்த உத்தரவு வந்தவுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மூட வேண்டிய கடைகள் இருப்பின் அது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 2 அல்லது 3 கடைகள் வரை மூட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. திருப்பூரை பொறுத்தவரை மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகளவில் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- தமிழ் கனவு என்றபெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
- 13-ந் தேதி அன்று திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்றபெயரிலான பண்பாட்டு பரப்புரை நிக ழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பா ட்டின் செழுமையையும், சமூகசமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டு க்கான வாய்ப்புகளையும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப்பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல்ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்மு னைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ்சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு 13-ந்தேதி அன்று திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் படிப்போம் நிறைய ! என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா , கற்சிலையும் கட்டடக் கலையும் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஈரோடு த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் சிறப்புவி ருந்தினர்களாக கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தஅனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது.
- கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
- கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 30.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டகலெக்டர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது . கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம்
மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் முகாம் நிறைவடைந்தது.
2 நாட்களாக நடந்த இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட 18 வங்கிகள் கலந்துகொண்டன. திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 325 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வங்கிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரீசிலனை செய்து கடன் வழங்க அறிவுறுத்தினார். மேலும் அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீதான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலனை செய்யப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
1-1-2023 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி இன்று (புதன்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறு சீரமைக்கப்பட்டு வாக்கு சாவடி பட்டியலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 298, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 313, 3-ம் பாலினத்தவர் 10 என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545, காங்கேயம் தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 295, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551, 3-ம் பாலினத்தவர் 21 என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125, அவினாசி (தனி) மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 313, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394, 3-ம் பாலினத்தவர் 4 என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698, திருப்பூர் வடக்கு மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 374, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540, 3-ம் பாலினத்தவர் 140 என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298, திருப்பூர் தெற்கு மறு சீரமைகப்பட்ட வாக்கு சாவடி 242, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 874, 3-ம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783, பல்லடம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 410, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 38, 3-ம் பாலினத்தவர் 69 என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486, உடுமலை மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 294, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 633, 3-ம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290, மடத்துக்குளம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 287, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120, 3-ம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். ஒட்டு மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2513, ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463, 3-ம் பாலினத்தவர் 324, என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்களில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக சைலஜா மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் வருவாய்த் துறையில் நிர்வாக காரணங்களுக்காக8 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, திருப்பூர்இந்து சமய அறநிலையத்துறைஉதவியாளர் அலுவலகதனி தாசில்தாராக இருந்தகோபாலகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், வடக்கு தாசில்தாராக பணியாற்றி வந்த கனகராஜ் இந்து சமய அறநிலை ய துறை உதவியாளர் அலுவலக தனிதாசில்தாராகவும், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தங்கவேலு,ஊத்துக்குளி தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்த சைலஜா, தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோல் திருப்பூர் டாஸ்மாக் கிடங்குமேலாளராக பணியாற்றிவந்த செல்வி, மடத்துக்குளம் தாசில்தாராகவும்,மடத்துக்குளம் தாசில்தாராக பணியாற்றி வந்த சபாபதி டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவிவேகானந்தன் உடுமலைசமூக பாதுகாப்பு திட்டதனிதாசில்தாராகவும், உடுமலை சமூகப் பாதுகாப்புதிட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ஜலஜா,உடுமலை ஆர்டிஓ. வின்நேர்முக உதவியாளராகவும்பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் வினீத்உத்தரவிட்டார்.
- மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
- மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 15 மாதத்தில், 6.85 கோடி பேர் இலவச பஸ்கள் மூலம் பயணித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கிளை 1ல் இருந்து, 43, கிளை, 2ல் இருந்து 27, பல்லடத்தில்இருந்து 51, காங்கயம், 45, தாராபுரம், 31, உடுமலை, 57 என மொத்தம் 254 டவுன் பஸ்கள்இயக்கப்படுகின்றன.
கடந்தாண்டு ஜூலை முதல், நடப்பாண்டு செப்டம்பர் வரையிலான 15 மாதத்தில் இந்த பஸ்களில், 6கோடியே, 81 லட்சத்து 59 ஆயிரத்து 815 பெண்கள், 3லட்சத்து 69 ஆயிரத்து 502 மாற்றுத்திறனாளிகள், 25 ஆயிரத்து 877 மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள், 38 ஆயிரத்து 186 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம், 6 கோடியே 85 லட்சத்து 93 ஆயிரத்து 380 பேர் பயணம் செய்துள்ளனர் எனமாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவிநாசி, வீரபாண்டி, பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
அவிநாசி :
பல்லடம், பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5-ந்தேதி (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் : பல்லடம் துணை மின் நிலையம்( காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.
பனப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):பனப்பாளையம், சேரன் நகா், ராயா்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், எல்லங்காடு, மாதப்பூா், மெஜஸ்டிக் சா்க்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.
உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா் மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிப்பட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.
அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம் (வாய்க்கால்மேடு), குளத்துப்பாளையம், கரைப்பாளையம், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகா், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டி.கே.டி.மில்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்